விவசாயிகள் செலுத்தும் விளைப்பொருட்கள் கிடங்கு வாடகைக் கட்டணம் ரத்து; விளைப்பொருட்கள் கிடங்கிற்கான மேலும் ஒரு மாத வாடகையை விவசாயிகள் செலுத்த தேவையில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவசாய விளைப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் சேமிப்புக் கிடங்களின் வாடகைக் கட்டணத்தை விவசாயிகள் மேலும் ஒரு மாதத்திற்கு செலுத்தத் தேவையில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதை தடுக்க நாடுதழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், விளைப்பொருட்களின் சேமிப்புக் கிடங்குக்கு விவசாயிகள் செலுத்தும் வாடகைக் கட்டணம் ஏப்ரல் மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு மாத காலம் விவசாயிகள் கிடங்கு வாடகைக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கபட்டுள்ளது. 


இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்... ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பயன்பாட்டிற்காக நவீன சேமிப்பு கிடங்குகளில் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள கிடங்கு வாடகை கட்டணத்தை 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது. கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களுக்கான பொருளீட்டு கடனிற்கான 5 சதவீத வட்டியை செலுத்த தேவையில்லை எனவும் அறிவிக்கபட்டுள்ளது. இது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது.


குளிர்பதன கிடங்குகளில் காய்களிகள் மற்றும் பழங்கள் சேமித்து வைக்க விவசாயிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்பயன்பாட்டு கட்டண தொகை  ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்படமாட்டாது எனவும், இக்கட்டணம் முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் 1 சதவீத சந்தை கட்டண ரத்தும் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது என பழனிசாமி தெரிவித்துள்ளார்.