கோடநாடு  விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க, வரும் வியாழக்கிழமை  திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற மர்ம சம்பவங்கள் குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்தியூ ஆவணப்படம் ஒன்றினை வெளியிட்டார். கொடநாடு கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் இந்த வீடியாவில் வாக்குமூலம் அளித்திருந்தனர், இதன் காரணமாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.


கோடநாடு கொள்ளை - கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படத்தில் கோடநாடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், கொள்ளைக்காக திட்டமிட்டது பற்றி தெரிவிக்கின்றனர். முக்கியமாக, கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் குறிப்பிட்டுள்ளார்.


கோடநாடு சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்ட படுகொலை என்றும், கோடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்றும் வீடியோவில் பேசியவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். 


இதையடுத்து, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க, வரும் வியாழக்கிழமை (24/1/19) திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ கோடநாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவர் மீது கொலை முயற்சி செய்யப்பட்டு தப்பி உள்ளார். ஒருவர் கொலை செய்துள்ளார். 


இந்த விவகாரத்தில் நேரடியாக தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரும் கார் ட்ரைவரான அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் - நேர்மையான ஜ.ஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகின்ற வியாழக்கிழமை (24/1/19) காலை 10 மணியளவில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு சென்னை மேற்கு வட்ட செயலாளர் ஜே,அன்பழகன், MLA, சென்னை தெற்கு வட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், MLA, சென்னை கிழக்கு வட்டச் செயலாளர் பி.கே.சேகர் பாபு, MLA, சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆகியோர் தலைமையில் "மாபெரும் கண்டன ஆர்பாட்டம்" நடைபெறும்’’ என அந்த அறிக்கையில், குறிப்பிட்டுள்ளனர்.