பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரி ஆளுநர் மாளிகை அருகே சின்னமலை பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவுசெய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூட்டப்பட்டது. 


அதில் ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்து அதை தீர்மானமாக ஆளுநருக்குப் பரிந்துரை செய்து தமிழக அரசு அனுப்பியது. இதையடுத்து, தமிழக அரசு பரிந்துரை வழங்கியும் ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆளுநருக்கு கோரிகைகள் வந்து கொண்டே இருக்கிறன்றது. 


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளர், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 போ் விடுதலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநா் பன்வாரிலால் புரோகித் காலம் தாழ்த்தி வருவதாக மதிமுக தலைவர் வைகோ குற்றம் சாட்டினார். மேலும் திமுக உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. 


இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இன்று வைகோ தலைமையில் எதிர்கட்சிகள் பலரும் ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். ஆளுநர் மாளிகை அருகே உள்ள சென்னை சின்னமலை பகுதியில் கட்சியினர் திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 


மேலும், இந்த போராட்டத்தில், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.