கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட தமிழக அரசு முன் வரவேண்டும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள ஒரு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மருத்துவமனையில் வார்டு பாய், மருந்துச்சீட்டு வழங்குவோர், செக்யூரிட்டி, தூய்மைப்பணி, நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வோர் உள்ளிட்ட வேலைகளிலுள்ள 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் தற்போது கொரோனா நோய் எதிர்ப்புப்பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


ஊரடங்கு நேரத்தில் தனியார் நிறுவனங்கள் எதுவும் ஊழியர்களிடம் ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசு கூறியுள்ள நிலையில், அரசு மருத்துவமனையிலேயே ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே இவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்களையும் அரசு வழங்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்