PSBB பள்ளி முதல்வரிடம் மீண்டும் விசாரணை: நடவடிக்கை எடுக்காதது குறித்து காவல்துறை கேள்வி
ஆசிரியர் ராஜகோபாலன் பற்றிய குற்றச்சாட்டுகள் பள்ளி நிர்வாகத்தை எட்டவிலையா? அல்லது குற்றச்சாட்டுகளுக்கு பள்ளி நிர்வாகம் செவிசாய்க்கவில்லையா? முழுமையான விசாரணை முடிந்தவுடன் அனைத்தும் தெளிவாகும். அதுவரை, வதந்திகளை பரப்பாமல் காத்திருப்போம்!
சென்னை: சென்னையின் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய விவகாரம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பலரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பி.எஸ்.பி.பி (PSBB) ஆசிரியர் ராஜகோபாலன் மீதான புகார் தொடர்பாக, அப்பள்ளியின் முதல்வரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடந்து வருகிறது.
பி.எஸ்.பி.பி ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்புகளில் தகாத முறையில் நடந்துகொள்வதாக ஏற்கனவே மாணவர்கள் தரப்பில் பல புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், பள்ளி நிர்வாகம் அவற்றை தீவிரமாக எடுத்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவரம் வெளிவந்தவுடன் இது தொடர்பாக விசாரிக்க பள்ளி நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரா ஆகியோர் நேற்று காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார்கள். நீண்ட நேரம் அவர்களிடம் விசாரணம் நடந்தது. எனினும், பள்ளி முதல்வர் மீண்டும் ஆஜராகும் படி காவல்துறை உத்தரவிட்டது.
அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி முதல்வரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முக்கியமாக, ஆசிரியர் ராஜகோபாலன் பற்றி மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் பள்ளி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பற்றியே கேள்விகள் கேட்கப்பட்டன.
ALSO READ: தமிழக பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும்: அன்பில் மகேஷ்
இந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி, இந்த திசையில் பல அவசர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பள்ளிகளில் இது போன்ற பாலியல் புகார்களை (Sexual Harassment Cases) விசாரிப்பதற்கான ஒரு தனிக்குழு அமைக்கபடும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும்போது ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வெண்டும் என்பதற்கான கூடுதல் விதிமுறைகளை தமிழக அரசு (Tamil Nadu Government) விரையில் வெளியிடும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, சென்னையில் மிகவும் புகழ்பெற்ற பள்ளியாக இருக்கும் பத்மா சேஷாத்ரி பள்ளி சென்னையின் ஒரு அடையாளமாகவே இருந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ் சினிமா, நாடகம் என அனைத்திலும் மிகப் பிரபல நடிகரான ஒய்.ஜி.மகேந்திரனின் தாய் ராஜலட்சுமி அவர்கள், சென்னையின் புகழ்பெற்ற பத்மாசேஷாத்ரி பள்ளிகளை நிறுவினார். துவக்கம் முதலே இந்த பள்ளிக்கு நல்ல பெயர் உள்ளது. உயர்மட்ட கட்டுப்பாட்டுடனும், நன்மதிப்புகளுடனும் இந்த பள்ளி நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் படித்த பல மாணவர்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்
பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் இந்த வெட்கக்கேடான நடவடிக்கைக்கு முழுவதுமாக அவர் மட்டும்தான் காரணமா? பள்ளிக்கும் அவரது செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? அவர் பற்றி தெரிந்தும் பள்ளி கண்டுகொள்ளவில்லையா? மாணவ மாணவியரின் பாதுகாப்பு ஆபத்தில் விடப்பட்டதா? குற்றச்சாட்டுகள் பள்ளி நிர்வாகத்தை எட்டவிலையா? அல்லது குற்றச்சாட்டுகளுக்கு பள்ளி நிர்வாகம் செவிசாய்க்கவில்லையா?
முழுமையான விசாரணை முடிந்தவுடன் அனைத்தும் தெளிவாகும். அதுவரை, வதந்திகளை பரப்பாமல் காத்திருப்போம்!!
ALSO READ: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR