பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

ஆன்லைன் வகுப்பு நடத்துகிறேன் என்ற பெயரில் அரைகுறை ஆடையுடன் வந்து பாலியல் ரீதியாக தொடர்ந்து மாணவிகளை தொந்தரவு செய்த பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் காவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 25, 2021, 12:14 PM IST
  • பாலியல் ரீதியாக தொடர்ந்து மாணவிகளை தொந்தரவு செய்த பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் கைது.
  • பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
  • போலீஸ் அதிகாரிகளுக்கு பள்ளி நிர்வாகம் தேவையான ஒத்துழைப்பைத் தரவில்லை எனத் தகவல்.
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் title=

சென்னை: தமிழக காவல் துறையினரால் பாலியல் புகாரில் விசாரிக்கப்பட்டு வந்த பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் நேற்று கைது செய்யப்பட்டதை அடுத்து, இன்று அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ராஜகோபாலனிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவரும் எனத்தெரிகிறது. 

சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளியில் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் என்பவர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச குறுஞ்சிய்திகளை அனுப்புவது, அரைகுறை ஆடையுடன் வந்து வகுப்பு நடத்துவது என பாலியல் ரீதியாக தொடர்ந்து மாணவிகளை தொந்தரவு செய்துள்ளார். மேலும் மாணவிகளை மிரட்டியும் உள்ளார். 

ALSO READ  | PSBB Sexual Harassment: பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது

மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வந்த மாணவிகள், ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மனு சமூக வலைத்தளங்களில் வெளியான பின்னர் தான், பி.எஸ்.பி.பி பள்ளியின் உண்மை முகம் வெளிய தெரியத்தொடங்கியது. 

நேற்று காலை பள்ளிக்கு விசாரணை செய்ய சென்ற போலீஸ் அதிகாரிகளுக்கு பள்ளி நிர்வாகம் தேவையான ஒத்துழைப்பைத் தரவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அதன்பிறகு அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ  | PSBB Sexual Harassment: பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

இந்தநிலையில், பாலியல் குற்றத்தில் வழக்கு பதிவு செய்ய்ப்பட்டுள்ள ராஜகோபாலன், இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News