இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் இருத்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த தம்பதிகளிடம் கைவரிசை காட்டிய திருடனுக்கு சராமரியாக அடி விழுந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கவுக்காம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் தனது அவருடைய மனைவி மயூரி மற்றும் குழந்தைகள் யாழினி, சரண் என குடும்பமாக  வாணியம்பாடியில் இருத்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 


இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த குடும்பத்தினரை ஒரு இருசக்கர வாகனம் வந்தது. பின் தொடர்ந்த Apache இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கேத்தாண்டப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தங்கள் கைவரிசையை காட்டினார்கள்.


சுரேஷின் மனைவி மயூரி அணிந்திருந்த கழுத்துச் சங்கிலையை பறிக்க முற்படும்போது சுதாரித்துக்கொண்ட அந்தப்பெண், அவர்களைக் கீழே தள்ளி விட்டார்


கீழே விழுந்த இருவரும், தாங்கல் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சத்தில் அங்கிருந்து ஓட முயன்றார்கள். அதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அவர்களை துரத்தினார்கள்.


ALSO READ | குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனத்தை நிராகரித்த மத்திய அரசு!


ஒருவர் மட்டும் சிக்கியுள்ளனர் மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பொதுமக்கள் ஒன்றுகூடி  மடக்கி பிடித்த ஒரு திருடனை (Theives Caught by People) கம்பத்தில் கட்டி சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர்.


கம்பத்தில் கட்டி வைத்து நையப்புடைத்த மக்கள், பின்னர் நாட்றம்பள்ளி போலீசாருக்கு வழிப்பறி சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளனர். 


கொள்ளைச் சம்பவம் நடத்த முயன்ற இடத்திற்கு வந்த போலீசார், பிடிபட்ட வழிப்பறி திருடனிடம் விசாரணை செய்தனர்.விசாரணையில், அவன், திம்மனூர் பிரசாந்த் என தெரியவந்தது.


பிரசாந்தை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


தப்பியோடியது  யார்? இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் யாரென்று தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


பிடிபட்ட பிரசாந்த் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை பறிமுதல் செய்த போலீசார், மற்றொருவனை தேடி வருகின்றனர்.


நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற வழிப்பறி சம்பவம், அந்த சுற்றுவட்டடாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | கோவையில் 21ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR