மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை கல்வி அலுவலர்கள் ஒழுங்காக வேலை செய்தாலே பள்ளிக்கல்வியில் தமிழகம் முதலிடம் பெறும் என கூறினார். அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள், சீருடைகள் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பள்ளி மைதானத்தை முறையாக பயன்படுத்தி மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், 5-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளின் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 


இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்; பள்ளி தொடங்கிய 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கான அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படும் என கூறினார். 5-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் விவரத்தை தெரிவிக்க வேண்டும்; அப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவாகிறது. விஜயதசமியின் போது அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.  ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பள்ளியில் சேரலாம்.


பெற்றோரோ மாணவர்களோ எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. டிசம்பர் மாதத்தில் கூட மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. மாணவர்களுக்கு சிரமம் இருக்கும் வகையில் தேர்வு இருக்காது. மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளி மைதானத்தை முறையாக பயன்படுத்தி மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும். அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள், சீருடைகள் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.