புதுவை சட்டமன்ற சபாநாயகர் அறையில் திமுக எம்.எல்.ஏ., சிவா தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி புதுவை சட்டமன்ற சபாநாயகர் அறையில் திமுக எம்.எல்.ஏ., சிவா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இந்நிலையில் புதுவை சட்டமன்ற சபாயாகர் அறையில் திமுக MLA சிவா தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். முன்னதாக கடந்த வெள்ளி அன்று மேகதாது விவகாரம் தொடர்பாக புதுவை சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என திமுக, அதிமுக கட்சி MLA-கள் சபாநாயகர் வைத்தியலிங்கத்திடன் மனு அளித்தனர்.


ஏற்கனவே தமிழகம் மற்றும் காரைக்காலில் விவசாயிகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நேரத்தில் காவிரியில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்றுவருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என கட்சி உறுப்பினர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்ககது.