தொடர் மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
தொடர் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி அறிவித்துள்ளார்!
தொடர் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி அறிவித்துள்ளார்!
அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக கருதப்படும் இந்த பருவ மழை, கடந்த இரு தினங்களா சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் தலை காட்டி வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று பேய்த மழையில்., புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் அருகே கீழ முட்டுக்காடு கிராமத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த லட்சுமி அம்மாள், கலைச்செல்வி, சாந்தி, விஜயா ஆகியோர் மின்னல் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேபோல் பெரம்பலூர் அருகே எறைய சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வேலு, காஞ்சிபுரம் மாவட்டம் நசரத்பேட்டையில் கோபி என்பவரும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மலர் என்பவரும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். மழையின் காரணமாக மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.