அரசு, தேர்வர்கள் இயக்குநகரம் இன்று +2 தேர்வு முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதன்படி,  http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in  ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, புதுச்சேரியில் 92.67 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்வு முடிவுகள் வெளியீடு:


புதுச்சேரியிலும், தமிழக அரசில் கல்வி பாடத்திட்டத்தைதான் அம்மாநிலத்தின் அரசாங்கம் பின்பற்றி வருகிறது. புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் 129 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 359 மாணவர்கள் பிளஸ்டூ தேர்வை எழுதினார்கள். இதையடுத்து,  தமிழ்நாடு முழுவதும் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையானது. இதையடுத்து, புதுச்சேரி மாநில பிளஸ் டூ தேர்வு முடிவுகளை முதலவர் ரங்கசாமி அவரது அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.


மேலும் படிக்க | 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது! 94.03% சதவீத மாணவர்கள் தேர்ச்சி!


தேர்ச்சி விகிதம்:


புதுச்சேரி மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட அம்மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமி, இந்த ஆண்டில் மொத்தம் 92.67 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார். இந்த தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட 3.46 சதவீதம் குறைவு என்றும் அவர் கூறினார். அரசு பள்ளிகளை பொருத்தவரை 85.38% சதவிகித மாணவர்களும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 56 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். மேலும், அதிகப்படியாக வணிகவியல் பாடத்தில் 157 மாணவர்கள் 100 க்கு 100 எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தமிழ் மொழியில் யாரும் 100க்கு 100 மதிப்பெண் வாங்கவில்லை என்றும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார். 


சி.பி.எஸ்.இ பாடத்திட்டம்:
 
+2 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை அடுத்து, சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குறித்த செய்தியையும் ரங்கசாமி அறிவித்தார். அதில், வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமலாகும் என்றும் அதில் தமிழ் மொழிப்பாடமும் விருப்பபாடமாக இடம்பெறும் எனவும் கூறினார். 


நீட் தேர்வு குறித்து முதல்வர்:


நீட்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவதற்காக கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். இதையடுத்து, வரும் கல்வியாண்டு துவக்கத்திலே மாணவர்களுக்கான பாடப்புத்தகம், இலவச நோட்டு புத்தகங்கள், சீறுடைகள் மற்றும் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.


தமிழ்நாடு தேர்ச்சி விகிதம்


இந்த ஆண்டு சுமார் 8.51 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர், அவர்களில் 5.36 லட்சம் மாணவர்கள் அறிவியல் பாடத்திலும், 2.54 லட்சம் பேர் வணிகத்திலும், 14,000 பேர் கலைப் பிரிவிலும் இருந்தனர். 2022 ஆம் ஆண்டில், 93.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வு மதிப்பெண்களுக்கு (அதிக மதிப்பெண்களுடன் மூன்று பாடங்களின் சராசரி), 20 சதவிகிதம் (ஒவ்வொரு பாடத்திலும் எழுதப்பட்டது) பிளஸ் ஒன் போர்டு தேர்வுக்கு 50 சதவிகிதம் வெயிட்டேஜ் வழங்கப்பட்டது. 30 சதவீதம், 12 ஆம் வகுப்பு நடைமுறை மற்றும் உள் மதிப்பீட்டிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: செக் செய்வது எப்படி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ