பெட்ரோல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க புதுவை அரசின் புதுவழி!
பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து புதுவை சட்டமன்ற சபாநாயகர் V வைத்திலிங்கம் அவர்கள், இன்று காலை சபாநாயகர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து புதுவை சட்டமன்ற சபாநாயகர் V வைத்திலிங்கம் அவர்கள், இன்று காலை சபாநாயகர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
வெனிசுலா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் நிலவும் அரசியல் நெருக்கடியு, எண்ணெய் உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சூழலால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகின்றது. பெட்ரோல் விலை உயர்வு என்பது ஏற்கமுடியாது ஒன்று என்றபோதிலும் மறுக்க முடியாத ஒன்று என மத்திய அரசு இதற்கு காரணம் தெரிவித்து வருகிறது
தினசரி உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் சாமானிய மக்கள், நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனை கவனிக்காமல் வரும் பொதுத்தேர்தலுக்காக பிராச்சாரம் மோற்கொள்ளுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது என எதிர்கட்சியினர் விமர்சனல்கள் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் ஆளும் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து புதுவை சட்டமன்ற சபாநாயகர் V வைத்திலிங்கம் அவர்கள், இன்று காலை சபாநாயகர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வருகைபுரிந்தார். இந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.