அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த புதுச்சேரி அதிமுக தேர்தல் குழு தலைவர் கண்ணன் கட்சியிலிருந்து விலகினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுவை முன்னாள் அமைச்சரான கண்ணன் காங்கிரஸ் கட்சி சார்பில் மேல்சபை எம்.பி.யாக (2009-2015) இருந்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தார். 


இந்நிலையில் கட்சி தொடர்பான செயல்பாடுகளில் அவர் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலின் போதும் அவர் தேர்தல் பணியாற்றாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். 


இதற்கிடையே தமிழகத்தில் அதிமுக-வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் அதிமுக-வில் இருந்து விலகுவதாக கண்ணன் நேற்று தெரிவித்தார். இதையொட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது:-


அதிமுக-வை விட்டு நான் வெளியேறுவது அனைவருக்கும் தெரிந்த வெளிப்படையான விஷயம்தான். இதுதொடர்பாக நான் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.