நாய்க்கு புலி வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்! போலீஸார் தீவிர விசாரணை...
Puducherry Tiger Latest News : தமிழகத்தில் அரியலூர் தஞ்சாவூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், வீடியோவிற்காக இளைஞர்கள் சிலர் செய்துள்ள செயல், மக்களுக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது.
Puducherry Tiger Latest News : இளைஞர்கள் பலர், தாங்களும் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கிலும், பிறரின் இயலாமையை வைத்து Fun என்ற பெயரில் வீடியோ எடுத்து வைரலாக வேண்டும் என்ற நோக்கிலும் பல விஷயங்களை செய்கின்றனர். இதில் ஒரு சில வீடியோக்கள் யாருக்கும் பாதகம் ஏற்படுத்தாத வகையில் இருந்தாலும், ஒரு சில காணொலிகள் உண்மையாகவே ஒருவரை மிகுந்த சங்கடத்திற்குள்ளாக்குகின்றன. அப்படிப்பட்ட வீடியோ குறித்தும் இளைஞர்களின் அற்பத்தனமான செயல்கள் குறித்தும் இங்கு காணலாம்.
அதிகரித்த புலிகளின் நடமாட்டம்..
தமிழகத்தில் அரியலூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் இன்று வரை சிறுத்தைகளை பிடிக்காமல் இருப்பதாலும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் நாய்க்கு புலி வேடமிட்டு அந்த நாயை வீதியில் இளைஞர்கள் உலாவிட்டனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியே சென்றவர்கள் ஊருக்குள் புலி தான் வந்துவிட்டது என்று அச்சமடைந்தனர் மேலும் இந்த
மேலும் படிக்க | 'எனது மொபைலும் ஒட்டு கேட்கப்படுகிறது...' குண்டை தூக்கிப்போட்ட ஹெச். ராஜா
பொதுமக்களை அச்சுறுத்த..
இந்த செய்தி அந்த பகுதியில் காட்டுதீயாகவும் பரவியது. இதனை அடுத்து சில இளைஞர்கள் கிட்டே சென்று பார்த்தபோது நாய்க்கு புலி வேடமிட்டு இருப்பது தெரியவந்தது. பொதுமக்களை அச்சுறுத்தவே சில இளைஞர்கள் இதுபோன்ற விஷமத்தனங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்து.
இதனை அடுத்து நாய்க்கு புலி வேடமிட்டு வீதியில் உலாவிட்ட இளைஞர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணையும் செய்து வருகின்றனர்.தமிழகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கும் நிலையில் புதுச்சேரியில் நாய்க்கு புலிவேடமிட்டு அதை வீதியில் உலாவிட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | அதிமுகவுக்கு டெபாசிட் தேறாது, 39 தொகுதிகளில் பாஜக வெற்றி உறுதி - பாஜக நிர்வாகி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ