புதுவை கவர்னர் கிரண் பேடி நீக்கம்; தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு
யாருமே எதிர்பாராத விதமாக, திடீரென்று புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி நீக்கபட்டார். யூனியன் பிரதேசமான புதுவையின் கூடுதல் பொறுப்பு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி: யாருமே எதிர்பாராத விதமாக, திடீரென்று புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி நீக்கபட்டார். யூனியன் பிரதேசமான புதுவையின் கூடுதல் பொறுப்பு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு (Governor of Telangana) வழங்கப்பட்டு உள்ளது.
அதிரடியான செயல்பாடுகளுக்கு பெயர் போனவர் புதுச்சேரி யூனியன் பிரதேச கவர்னராக பதவி வகித்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி. தற்போது அவர் முன்னாள் ஆளுநராகவும் அறியப்படுவார்.
புதுசேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் உச்சகட்டமாக அண்மையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது, புதுவையின் ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்ற மனுவையும் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்தனர்.
Also Read | PM மோடியை தொடர்ந்து தமிழகம் வரும் அமித்ஷா; வருகையின் நோக்கம் என்ன?
கிரண்பேடிக்கு எதிரான காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீர் என போரட்டம் தள்ளிப் போடப்பட்டது.
தற்போது புதுச்சேரி ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டு, புதுச்சேரி கவர்னராக தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதன் பின்னணி விவரங்கள் வேறு எதுவும் தெரியாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் தொடர் அழுத்தமே குடியரசுத் தலைவரின் முடிவுக்கு காரணம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் மகிழ்ச்சியடைகின்றன.
மறுபுறம் தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரவிருக்கும் நிலையில் இதுபோன்ற பல திடீர் திருப்பங்கள் நடைபெறுவது எதிர்பார்த்த ஒன்று என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Also Read | திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்: அசத்தும் தமிழகத்து Petrol Pump
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR