ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்தில் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியைத்தான் கருத வேண்டுமென பேசியிருந்தார். இந்தச் சூழலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தமிழணங்கு என்ற கேப்ஷனோடு தமிழ்த்தாயின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓவியர் சந்தோஷ் நாராயணன் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு வரைந்த அந்த ஓவியமானது, தமிழ்த்தாய் கையில் ‘ழ’ எழுத்து பொறித்த வேலினை ஏந்தியபடி காலில் சிலம்போடும், கண்களில் உக்கிரத்தோடும் இருப்பது போல் அமைந்திருந்தது. ரஹ்மான் பகிர்ந்ததை அடுத்து அந்த ஓவியம் வைரலானது. 



அதுமட்டுமின்றி, தமிழ்த்தாய் ஏன் கறுப்பாக இருக்கிறார் என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பினர். அதற்கு மற்றொரு தரப்பினர் கடும் ஆட்சேபத்தை தெரிவித்து தமிழன்னை கறுப்பாக இருப்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்றனர்.


மேலும் படிக்க | தஞ்சை பெரிய கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


இந்நிலையில், புதுச்சேரி அருகே பாகூர் பாரதியார் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிப்பவர் முத்தமிழ்ச்செல்வன். இவர் அங்குள்ள சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது, நுண்கலை ஆசிரியர் உமாபதியிடம் கிராம புறங்களில் பயனற்று கிடக்கும் தென்னை நார், வாழை மட்டை, பனை மர பொருட்கள் ஆகியவற்றை கொண்டு நுண்கலை பொருட்களை உருவாக்கும் பயிற்சியை பெற்றார். 



அதன் அடிப்படையில், ஓவியர் சந்தோஷ்நாராயணன் உருவாக்கிய ”தமிழணங்கு” ஓவியத்தை சோலை இலை மற்றும் மூங்கிலை கொண்டு நுண்கலை சிற்பமாக வடிவமைத்து அசத்தியுள்ளார். 


மேலும் படிக்க | தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விண்ணை தொடும் பூக்களின் விலைகள்


இந்த நுண்கலை சிற்பம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சிறப்பாக சிற்பத்தை உருவாக்கிய முத்தமிழ்ச்செல்வனுக்கு பலர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR