பருப்பு, பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும் - தமிழக உணவு துறை அமைச்சர்
பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் தொடர்ந்து ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:-
ரேசன் கடைகளில் உணவுப்பொருள் விநியோகம் சீராக நடைபெறுகிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும் .
ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் எந்தவித தொய்வும் இருக்காது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட்கார்டுகள் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்ட பின்பு ரேசனில் பொருட்கள் வழங்குவது இன்னும் வேகம் எடுக்கும்.
குடும்ப அட்டை தாரர்களின் விருப்பத்தின் பேரில் அரிசிக்குப் பதிலாக கோதுமை வழங்கப்படுகிறது. அனைத்து வில்லையில்லா பொருட்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றனர். அரிசி வழங்கவதற்கு மத்திய அரசு சில நிபந்தனைகளை வித்தித்துள்ளது என்றும் அவர் கூறினார்.