கடந்த இரண்டு ஆண்டுகளாக பருப்பு வகைகளின் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இந்நிலையில், நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை காலம் துவங்க உள்ளதால் பருப்பு விலை மேலும் அதிகரிக்கும் என வேளாண் உற்பத்தி சந்தை கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது கிலோ ரூ.220 க்கும் விற்கப்படும் துவரம் பருப்பு, இனி வரும் நாட்களில் ரூ.300 ஐ தாண்டும் என கூறுகின்றனர். வரத்து மற்றும் தேவைக்கு ஏற்பட்ட பருப்பு வகைகளின் விலை வேறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு பருப்பு வகைகளின் விலைகள் குறைய வாய்ப்பு இல்லை என வாணிப கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.


கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருப்பு உற்பத்தி குறைந்துள்ளதால் ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா, மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து பருப்புக்களை இறக்குமதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.