சென்னை: புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம், சோலார் மின் உற்பத்தியில் நிர்ணயிக்கபப்ட்ட இலக்கை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரயில்வே துறையின் முன்முயற்சிகளின் காரணமாக நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் சூரிய மின் சக்தி உற்பத்தியை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  இந்த சூரிய மின்சக்தி உற்பத்தி நடவடிக்கைகளில் ஒன்றாக, புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்திலும் சூரிய மின் சக்தி உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


தற்போது சென்னையின் செண்ட்ரல் நிலையம் என்று ஒரு காலத்தில் அறியப்பட்ட புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் சூரிய மின் சக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது.


இந்த ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தங்குமிடங்களில் நிறுவப்பட்ட சூரிய தகடுகள் மூலம் 100 சதவீத மின் ஆற்றல் தேவை தயாரிக்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளது என்பதை ரயில்வே இணையமைச்சர் அஷ்வினி வைஷ்ணா தெரிவித்துள்ளார்.



புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தில், தினசரி 6000 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  இதில், இந்த ரயில் நிலையத்துக்கு தேவையான 2000 யூனிட் பயன்படுத்தப்பட்ட பிறகு 4000 யூனிட் மின்சாரம் உபரியாக இருக்கிறது.


சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தின் இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில்,



அந்த 4000 யூனிட் மின்சாரமும், சென்ட்ரல் மூர் மார்க்கெட் புறநகர் மின்சார ரயில் நிலையம் மற்றும் நிர்வாக அலுலகத்திற்கு தேவையான 2,000 யூனிட், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துக்கு 2 000 யூனிட் மின்சாரம் என விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 


சூரிய மின்சக்தி மூலம் ஆண்டுக்கு 38 லட்சம் ரூபாய் கிடைப்பதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தைப் போலவே, தாம்பரம், மாம்பலம், கிண்டி, செங்கல்பட்டு புறநகர் நிலையங்கள் என சென்னை கோட்டத்துக்குட்பட்ட 13 ரயில் நிலையங்களில் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த அதிமுக ஆட்சியில், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


Also Read | கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரசுப் பேருந்தை பந்தாடிய காட்டுயானை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR