புழல் மத்திய சிறையில் சிறை கைதிகளுக்கு முறைக்கேடாக வசதிகள் செய்து கொடுத்த விவகாரத்தில் புழல் சிறை வார்டன்கள் 8 பேர் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு டிவி, செல்போன், சொகுசு படுக்கைகள் என பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் புகைபடங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்த சம்பவத்தை அடுத்து புழல் சிறையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் டிவி, மின்சார அடுப்பு, மைக்ரோ ஓவன் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். 


கைதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளுகு புழல் சிறையிலுள்ள அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதும் இந்த சோதனை மூலம் தெரியவந்தது. 


எனினும் இதுகுறித்து தனது கருத்தினை தெரிவித்த அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள் "முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ளவும், தங்களது சொந்த ஆடைகளை உடுத்திக்கொள்ளவும் அனுமதி உண்டு. சிறைக்கும் செல்போன்களை பயன்படுத்த அனுமதி கிடையாது, சிறைக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.


இந்நிலையில் தற்போது புழல் சிறை கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் வழங்கிய விவகாரத்தில், புழல் சிறை தலைமை வார்டன்களான விஜயராஜ், ஊட்டி கிளைச் சிறைக்கும், கணேசன் செங்கம் கிளைச் சிறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


முதல்நிலை வார்டன்களான பாவாடைராயர், செல்வக்குமார், சிங்காரவேலன், சுப்ரமணி, பிரதாப்சிங் மற்றும் ஜெபஸ்டின் செல்வக்குமார் ஆகியோர் வேலூர், சேலம், திருச்சி, கோவை சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.