தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கை நீட் தேர்வு மூலம் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.


நீட் தேர்வு என்ற பெயரில் தமிழக மாணவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், மெட்ரிக் பள்ளி இயக்குநர் நீட் பயிற்சியகம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது...! 


தனியார் பள்ளியில் நீட் பயிற்சியில் சேர பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் பள்ளிகளில் தனியார் நிறுவனங்கள் மூலம் நீட் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.


மேலும், நீட் தேர்வுக்கு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை தனியார் பள்ளிகள் வற்புறுத்தக்கூடாது எனவும் இது தொடர்பாக சிறப்பு வகுப்புகளை நடத்த தனியாக கட்டணம் வசூலிக்கவும் பள்ளிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.