ஐதராபாத்: அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான குவால்காம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்வுள்ளது. அதாவது ரூ.3,904.55 கோடி முதலீட்டில் ஹைதராபாத்தில் தனது இரண்டாவது பெரிய நிறுவனத்தை குவால்காம் நிறுவனம் அமைக்க முடிவு செய்துள்ளது.இதன்மூலம் சுமார் 8700 மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் எனக் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குவால்காம் நிறுவனம் மிகப்பெரிய முதலீடுகளை அறிவித்துள்ளதால், அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து வளாகம் செயல்படத் தயாராகிவிடும் எனத்தெரிகிறது.


இந்த முதலீடு திட்டம் குறித்து தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தரப்பில், "ஹைதராபாத்தில் வரும் புதிய வளாகம் ராயதுர்கத்தில் 1.572 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும்" என்று கூறப்பட்டு உள்ளது.


தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி. ராமராவ், குவால்காம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆகாஷ் பல்கிவாலா, துணைத் தலைவர்கள் ஜேம்ஸ் ஜீன், லட்சுமி ராயபுடி, பராக் அகாஸ் மற்றும் நிறுவனத்தின் இயக்குனர் தேவ் சிங் ஆகியோரை ராமராவ் சந்தித்த பிறகு குவால்காம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



குவால்காம் நிறுவனமானது மென்பொருள் தவிர, விவசாயம், கல்வி, கனெக்டெட் டிவைஸ் போன்ற துறைகளில் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 


குவால்காம் நிறுவனம் மென்பொருள் மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகளை வழங்குவதில் நிறுவனம் முன்னோடியாக உள்ளது. மேலும் 5G, 4G, CDMA மற்றும் பிற மொபைல் தகவல்தொடர்பு தரநிலைகளுக்கு முக்கியமான காப்புரிமைகளை கொண்டுள்ளது. 


குவால்காம் நிறுவனம் ஹைதராபாத்தை பெரிய முதலீடுகளுக்குத் தேர்ந்தெடுப்பது குறித்து தனது மகிழ்ச்சியை அமைச்சர் கே.டி. ராமராவ் வெளிப்படுத்தியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR