ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ராகுல் காந்தி, கேரளா திருவனந்தபுரம் வந்தடைந்தார். பின்னர் திருவனந்தபுரத்திலிருந்து வாகனம் மூலம் கேரள கடற்கரையில் உள்ள விழிஞ்ஞம், பூத்துறை பகுதிக்கு சென்றார். அங்கு ஒக்கி புயலால் உயிரிழந்த கேரள மீனவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கேரள மீனவர் குடும்பங்களை சந்தித்ததை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தார். 


பின்னர் காணாமல் போன மற்றும் இறந்த மீனவ குடும்பங்களை சந்தித்து அறுதல் கூறினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டார். 


 



 


காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் கலந்திக்கொண்டனர். 


இன்று இரவு மீண்டும் டெல்லி திரும்ப உள்ளார்.