வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் கூட்டணி எடுபடாது, பாஜக மெகா கூட்டணி அமைக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கே.கே.நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் திருநாள் விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக்கினார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் ராகுலின் பிரதமர் கனவு நிறைவேறாது என கூறியுள்ளார். 
 
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளன. 


மாயாவதியும், அகிலேஷ் யாதவும் அங்கு கூட்டணி அமைத்துள்ளதால், அவர்களை தவிர்த்துவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் மிகப்பெரிய கூட்டணியை அமைக்க முடியாது. அவ்வாறு அமைத்தாலும் அவரது பிரதமர் கனவு நிறைவேறாது. திமுக தலைவர் ஸ்டாலின் ஏதோ தெரியாமல், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திவிட்டார்.


அரசியல்ரீதியாக குற்றம்சுமத்தப்பட்டாலும், அதனை பொய்யென முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.