தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில், சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. மத்தியபிரதேசத்தில் பாஜக-காங்கிரஸ் இடையே இழுபறி நடக்கிறது. ஒருவேளை மாயாவதி மற்றும் சுயேச்சை ஆதரவு அளித்தால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும், மிசோரமில் எம்என்எப் கட்சியும் ஆட்சியை கைப்பற்றியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐந்து மாநிலங்களில் கிட்டத்தட்ட மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. இதனை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.


இந்தநிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அம்மாநில முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜவுக்கு பெரும் பின்னடைவு ஏற்ப்பட்டு உள்ளது. அக்கட்சியின் ஆணவத்துக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அவர்களுக்கு சரியான படம் கற்பித்துள்ளனர். 


ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. காங்கிரஸ் வெற்றிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிரசாரமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் அனைத்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு வழ்த்தக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் கூறினார்.