Rain Alert for Chennai: கிழக்கு மத்திய பிரதேசம்  மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  நேற்று (செப். 15) காலை மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாள்களுக்கு மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப். 16) தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (செப். 16) பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் கனமழை


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்ட நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மதுரவாயல், போரூர், வளசரவாக்கம், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. 



அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான பல்லாவரம், புழல், செங்குன்றம், மாதவரம், சோழவரம், மணலி, பொன்னேரி, காரனோடை, தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, , ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் மழை பரவலாக பெய்தது. 


நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும் என கூறப்பட்டிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது. 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் (செப். 17) நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


இன்றும், நாளையும்...


இது ஒருபுறம் இருக்க தமிழ்நாடு வெதர்மேன் அவரது சமூக வலைதளப் பதிவில், இந்த தென்மேற்கு பருவநிலையில் தற்போது தான் அதிக மழைபொழிவை தமிழ்நாடு காணப்போவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இன்றிரவும், நாளை இரவும் சென்னையில் பரந்தளவில் மழை பொழிவு இருக்கும் எனவும் அவர் கணித்துள்ளார்.