மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளது: IMD
மேலடுக்கு சுழற்சி காரணமாக குறிப்பாக தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, ஈரோட், கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாத்புரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கு காரணம் இலங்கையின் தென்கிழக்கில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி ஆகும். இதனால் குறிப்பாக தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சென்னை மற்றும் அதை சுற்றி சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் 16 செ.மீ. மழையும், அதற்கு அடுத்ததாக நீலகிரி மாவட்டத்தில் 6 செ.மீ. மழையும் பொழிந்துள்ளது.