’சட்டென்று மாறிய வானிலை’ மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி
அசானி புயல் காரணமாக சென்னை முழுவதும் நள்ளிரவு முதல் மழைபெய்து வருகிறது
அக்னி நட்சத்திரத்தால் கோடை வெயிலால் மக்கள் வாடி வந்த நிலையில், சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வங்கக்கடலில் எழுந்துள்ள அசானி புயல் காரணமாக சென்னையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை நகரம் முழுவதும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்கிறது. ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் கனமழை பெய்து வருகிறது.
மேலும் படிக்க | ஊட்டி போல மாறிய சென்னை : காரணம் இதுதான்
அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது. காலையில் வானம் மேகமூட்டத்துடன் குளிர் காற்றும் வீசுகிறது. இதனால் திரும்பிய திசையெங்கும் சென்னை குளு குளு சென்னையாக மாறியிருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகம் முழுவதும் 33 மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தர்மபுரி, ஈரோடு, கள்ளகுறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இன்னும் ஒருசில மணி நேரத்தில் நல்ல மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தின் வரலாற்று 4200 ஆண்டுகளுக்கு முற்பட்டது - முக ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR