சென்னையின் பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார்.


தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். 


இதனால் பள்ளி, கல்லூரி செல்வோர், பணிக்கு செல்வோர், இதர வேலை நிமித்தமாக செல்வோர் என கடுமையாக பாதிக்கப்பட்டனர். 


சென்னையில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் வெள்ள அபாயம் ஏற்படுமா? என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் தற்போது பெய்து வரும் மழையால் வெள்ளம் பெருக்கம் ஏற்படாது என்று தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.