தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு போதைப் பொருள்களின் தலைநகரமாக தமிழகம் மாறியதாகவும்., தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியதாக திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளர் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 கிலோமீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, காவல்துறையின் நடவடிக்கையை வெளிக்கொண்டும் வரும் வகையில் தமிழகம் எங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது என கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குடியுரிமை திருத்தச் சட்டம்! மத்திய பாஜக அரசை எதிர்த்து மக்களுக்காக குரல் குடுத்துள்ள விஜய்!


இந்த அவலமான அரசை வீழ்த்துகிற மக்கள் புரட்சி தொடங்கியுள்ளது என்று கூறிய ராஜன் செல்லப்பா, இந்த மக்கள் புரட்சியின் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்கும் என்று கூறினார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கூட்டணி அமைத்துக் கொள்ள வந்த கட்சிகளிடம் இன்றைக்கு அதிமுக நேரடியாக சென்று கூட்டணி பேசுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சுயநலத்திற்காக பதவிக்காக எங்களை விட்டு சென்றுள்ளார்கள். அதிமுகவிற்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் யாருக்கு வரும் என்றால் அதிமுகவிற்கு தான் இதுதான் வரலாறு. யார் கூட்டணி என்பது எங்களுக்கு முக்கியமல்ல மக்கள் கூட்டணியே எங்களுக்கு முக்கியம் என கூறினார்.



தொடர்ந்து பேசிய ராஜன் செல்லப்பா, பாஜக கூட்டணியில் சிஏஏ சட்டத்தை ஆதரித்த அதிமுக இன்றைக்கு எதிர்கிறதே என்ற கேள்விக்கு பதிலளித்தார். பாஜக கூட்டணியின் போது அதிமுக சில கட்டுப்பாடுகளை விதித்து தான் CAA சட்டத்திற்கு ஆதரவு கொடுத்தோம். CAA சட்டத்திற்கு சில விதிமுறைகளை ஆராய்ந்த பிறகு தான் ஆதரிப்போம் என்ற கட்டுப்பாடுடன் தான் CAA சட்டத்தை அதிமுக ஆதரித்துள்ளது. அதிமுக எப்போது வேண்டுமானாலும் நல்ல முடிவுகளுக்கு உடன் நிற்கும். நாடாளுமன்றத்தில் அவசர நிலையில் CAA சட்டத்திற்கு ஆதரவு கொடுக்கப்பட்டதே தவிர? உண்மையாக CAA சட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை? என கூறினார்.


தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் அது குறித்த கேள்விக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பதில் அளிக்கும்போது, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை தான் தொடங்கி வைக்கிறார் என்றார். மேலும், திமுகவில் ஒரே முஸ்லிம் லீக் கட்சியைத் தவிர மற்ற எந்த இஸ்லாமிய அமைப்பினரும் திமுகவுடன் கூட்டணியில் இல்லை. அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்றும் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | தமிழகத்தில் பிறை தெரிந்தது.. இன்று முதல் ரமலான் நோன்பு ஆரம்பம்: தலைமை காஜி அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ