ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்த ’செக்’..! லுக்அவுட் நோட்டீஸ் வழங்க திட்டம்
தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க, விமான நிலையங்களில் காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் வழங்க திட்டமிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆவினில் வேலைவாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்டோர் மீது விருதுநகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளில் முன்ஜாமீன்கோரி ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால், வெள்ளிக்கிழமை விருதுநகரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் திடீரென தலைமறைவானார்.
ALSO READ | ’பண மோசடி மட்டுமல்ல.. இன்னும் இருக்கு’ ராஜேந்திரபாலாஜி மீது குவியும் புகார்கள்
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் வெளியிட்ட அறிவிப்பில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ராஜேந்திரபாலாஜி வெவ்வேறு கார்களில் மாறி மாறிச் சென்று தலைமறைவானதாக தெரிவித்தார். மேலும், 8 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வருவதாகவும் கூறினார். சென்னை, பெங்களுரூ, வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என தமிழகம் முழுவதும் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடுகின்றனர். பெங்களூருவில் தலைமறைவாக இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், அங்கும் தனிப்படை காவல்துறையினர் ராஜேந்திரபாலாஜி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது. அடுத்தடுத்து காவல்துறையினர் செக் வைத்துக் கொண்டே இருப்பதால், ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இருக்கும் இடம் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | எங்கே இருக்கிறார் ராஜேந்திராபாலாஜி? சகோதரி மகன் உள்ளிட்ட 3 பேர் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR