நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரஜினி ரசிகர் மன்றத்தினர் புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு வெங்காயம் வழங்கி கொண்டாடினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருகின்ற 12 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாகவே அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.


அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மகளிர் அணி சார்பில் மெய்நின்றநாதர் சுவாமி ஆலயத்தின் முன்னாள் கூடி பூ, பழம், இனிப்புகளுடன் வெங்காயத்தை தாம்பூலத்தில் வைத்து ஊர்வலமாக சென்று ரஜினி பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.


இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் வெங்காயத்தையும் சேர்த்து வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடினர்.