Rajinikanth, Vijay TVK | விஜய் கட்சி பிரயோஜமில்லை, அவரால் ஜெயிக்க முடியாது, கஷ்டம் என தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணராவ். அவரின் இந்த பேட்டி விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே விஜய் - ரஜினி இடையே ’சூப்பர் ஸ்டார்’ யார்?, கோலிவுட்டின் வசூல் மன்னன் யார்? என்ற  புகைச்சல் புகைந்து கொண்டிருக்கும் நேரத்தில் சத்ய நாராயண ராவ் இப்படி பேட்டியளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் அவர், இப்போது திடீரென தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருக்கும் அவர், அண்மையில் விக்கிரவாண்டியில் பிரம்மாண்மாக மாநாடு நடத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'விஜய் வந்துவிட்டால் உடனே எதுவும் மாறிடாது...' எஸ்.வி. சேகர் சொல்லும் லாஜிக்கை பாருங்க


அந்த மாநாட்டில் விஜய் பேசும்போது, " பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரை வழிகாட்டிகளாக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் செயல்படும். மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் தவெக அரசியல் களத்தில் களமாடும். சாதி, மதம், இனம் பேதங்களைக் கடந்து அனைவரும் சமம் என்ற உயரிய கொள்கைகளை பின்பற்றும். தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க பாடுபடுவோம். குடும்ப அரசியலுக்கு எதிராகவும், திராவிட மாடல் என்ற போர்வையில் பெரியார், அண்ணா பெயரை வைத்துக் கொண்டு தமிழக மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எதிரான களத்தில் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் செய்யும். 2026 சட்டமன்ற தேர்தலை தவெக எதிர்கொள்ளும்" என அதிரடியாக பேசினார். அவரின் இந்த பேச்சு அரசியல் களத்தில் சலசலப்புகளை உருவாக்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட அண்மையில் விஜய் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார். 


இப்போது கட்சி தொடங்கியவர்கள் கூட திமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் கடந்த மூன்று ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை ஒருமுறை எண்ணிப் பார்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், வசவாளர்கள் வாழட்டும், எங்களுக்கு மக்களுக்கு பணி செய்வதற்கே நேரம் போதவில்லை என்றும் அவர் கூறினார். முதலமைச்சரின் இந்தப் பேச்சு விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாகவே இருந்தது. இதை வைத்து விஜய் அரசியல் களத்தில் கவனம் பெற தொடங்கிவிட்டார் என அவரது ரசிகர்கள் கூறிக் கொண்டிருந்த நேரத்தில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணராவ், விஜய் கட்சி அரசியலில் ஜெயிப்பது கஷ்டம் என கூறியுள்ளார்.


சத்ய நாராயண ராவ் பேசும்போது, "வரட்டும்.  யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கமல்ஹாசன் பண்ணியதுபோல் அவரும் பண்ணட்டும். ஆனால் பிரயோஜனம் இல்லை. அவரலால் சாதிக்க முடியாது. வெற்றி பெறுவது கஷ்டம். இன்னும் கொஞ்சம் நாள் பார்த்தால் தெரிந்துவிடும்" என தெரிவித்துள்ளார்.  


மேலும் படிக்க | மாணவர்களுக்கு குட்நியூஸ்! 7 லட்சம் ரூபாய் வரை கடனுதவி - மத்திய அரசு ஒப்புதல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ