Super Star ரஜினியின் கட்சியின் பெயர் இதுதானா? சின்னம் என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாத தொடக்கத்தில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கத் தயாராக இருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு ஒன்று வந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் பல வருடங்களாக காத்திருந்த அந்த தருணம் வந்துகிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாத தொடக்கத்தில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கத் தயாராக இருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அரசியல் கட்சி வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், கட்சி 2021 ஜனவரியில் தொடங்கப்படும் என்றும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். அதன் பின்னர், நடிகர் ரஜினி மக்கள் மன்றம் உறுப்பினர்களுடன் பல்வேறு கூட்டங்கள் நடத்தியுள்ளார்.
ALSO READ: Super star Rajinikanth 2020-ல் வைரல் ஆன அந்த 5 தருணங்கள்
இது தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு ஒன்று வந்துள்ளது. ரஜினிகாந்த் (Rajinikanth) ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார் என்றும் அவரது கட்சி ‘ஆட்டோரிக்ஷா’ சின்னத்துடன் தேர்தல் களத்தில் இறங்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துவக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி (Super Star Rajini), ‘மக்கள் சக்தி கழகம்’ என்ற பெயரை முதலில் பதிவு செய்திருந்ததார். மேலும், பாபா முத்திரையை கட்சியின் சின்னமாக வைத்துக்கொள்ள அனுமதி கோரியிருந்தார். ஆனால், தேர்தல் ஆணையம் (Election Commission) அவருக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Kamal vs Rajini: மக்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன்!
கட்சி துவங்குவது குறித்த உறுதியான முடிவை சமீபத்தில் ரஜினி அறிவித்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது அவரது கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து வந்துள்ள செய்து உண்மையானால், ரஜினி அபிமானிகளுக்கு இது இன்னும் அதிக அளவு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR