தேர்தலை குறித்து ரஜினிகாந்த் கருத்து:-
தமிழ்நாட்டில் மொத்தம் 233 தொகுதிகள், அதில் 232 தொகுதிகளில் தேர்தலும் மற்றும் ஒரு தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட 3700க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாக்கு பதிவை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காலை 7 மணி அளவில் செலுத்திவிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ரஜினிகாந்த் "அனைவரும் தங்கள் கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அது நமது ஜனநாயக கடமை. இம்முறை தமிழ் நாட்டில் நடக்கும் இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல் தான்" என்று தெரிவித்தார்.