நடிகர் ரஜினிகாந்த் இன்று திருநாவுக்கரசர் மற்றும் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து, மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் 11ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.


இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்து ரஜினிகாந்த், திருநாவுக்கரசர், திருமாவளவன் சந்திப்பு தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டது.