கடந்த 26 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் இன்று பரோலில் விடுவிக்கப்பட்டு ஜோலார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் பேரறிவாளனும் ஒன்று. இவர் கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். 26 ஆண்டுகள் கழித்து பரோல் கிடைத்துள்ளது. 


பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு அளிக்க வேண்டுமென அவரது தாயார் அற்புதமம்மாள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். இதனையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது. 


பேரறிவாளனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் அவருடைய வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.