நாட்டில் கொரோனா இரண்டாவது  அலை பரவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும், கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்னம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பெருந்தொற்றால் (Corona Virus) சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவைப்பட்டால் ஜாமீன் வழங்க வேண்டும் கோரிக்கை பல தரப்பில் இருந்தும் வைக்கப்பட்டு வந்தது.


ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளன் நீரிழிவு (Diabetes) மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குத் கொரோனா (Corona) தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளததாக கூறப்பட்டது. பேரறிவாளன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சில நாட்களுக்கு முன்னர் (2021,மே 18) தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் (M.K.Stalin) கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த கோரிக்கையை பரிசீலித்த  தமிழக அரசு, கடந்த 19ம் தேதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து, உத்தரவிட்டது.


இதை அடுத்து, பேரறிவாளன் தரப்பில், தேவையான மருத்துவ ஆவணங்கள், மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான அறிக்கைகள்  ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டு இன்று பேரறிவாளன் பரோலில் விடுவிக்கபட உள்ளார்.


சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து பேரறிவாளனை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் அழைத்து சென்றனர்.பேரறிவாளன் இன்று முதல் 30 நாட்களுக்கு சாதாரண விடுப்பில் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.


ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்,  கைதான பேரறிவாளன் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் சர்க்கரை நோய் காரணமாக, அவருக்கு கொரானா வைரஸ் தொற்று பரவல் ஆபத்து அதிகம் உள்ளதால் மருத்துவ காரணங்களுக்காக 30 நாட்கள் சாதாரண விடுப்பில் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என சில நாட்களுக்கு முன் மதிமுக தலைவர் வைகோவும் (Vaiko) கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | ஆன்டிபாடி என்றால் என்ன; கொரோனா தொற்றுடன் போராட அது எவ்வாறு உதவுகிறது?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!