ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து என நாராயணசாமி கருத்து...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாக பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளனர். அவர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில், தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில்  தெரிவித்துள்ளது. 


இதுக்குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆனால், அதிக நாட்கள் குற்றவாளிகள் சிறையில் இருந்ததால் தமிழக அரசு அதுகுறித்து பரிசீலனை செய்வதில் தவறு இல்லை” என்று கூறினார். மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை குறித்து பேசுகையில், “வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான். விலையை ஏறிக்கொண்டு இருப்பதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். வருகின்ற தேர்தலில் நாட்டு மக்கள் பா.ஜ.கவுக்கு நல்ல பாடத்தை தருவார்கள்" என தெரிவித்துள்ளார்.