முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நலினி தன்னை விடுதலை செய்ய கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தமிழக அமைச்சரவையில் 7 பேரது விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பரிந்துறை கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதன் காரணமாக தங்களை விடுதலை செய்யவேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி முருகன், நளினி ஆகியோர்  உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும் இவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.


இந்நிலையில், இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, வேலூர் சிறையில் உள்ள நளினி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 


இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. விடுதலை தொடர்பான உத்தரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும்போது ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.


இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.