மாநிலங்களவைத் தேர்தல் ஜூன் 11-ம் தேதி நடைபெறும்:- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்தியா முழுவதும் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே காலியான இடங்களுக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்குகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.
அதிமுக நான்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 3 இடங்களில் அதிமுக எளிதாக வெற்றி பெறும். 4-வது வேட்பாளருக்கும் போட்டி இருக்கும் என தெரிகிறது.
அதிமுக சார்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களை பெயர்கள் வருமாறு:- ஆர்.வைத்திலிங்கம், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார், நவநீதகிருஷ்ணன்.
அதேபோல திமுக கூட்டணிக்கு 98 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அந்த வேட்பாளர்களின் பெயர்கள் டி.கே. எஸ்.இளங்கோவன் மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகும்.