சென்னை: திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 பேரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தல் வரும் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு ஜூலை 1 ஆம் தேதி துவங்கியது. வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை 11. வாக்கு பதிவு முடிந்தவுடன், அப்பொழுதே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. அதாவது தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுகவுக்கு 3 இடங்களும், திமுகவுக்கு 3 இடங்களும் கிடைக்கும். ஒரு மாநிலங்களவை எம்.பி.யைத் தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. எனவே இந்த ஆறு எம்.பி.க்களையும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் எனத்தெரிகிறது.


திமுகவைப் பொறுத்தவரை ஒரு இடம் மதிமுகவுக்கு, மற்ற இரண்டு இடங்கள் தங்கள் கட்சி உறுப்பினருக்கும் ஒதுக்கி உள்ளது. அந்தவகையில், தொமுசவின் பொதுச்செயலாளரான சண்முகம் மற்றும் மூத்த வழக்க்றிஞர் வில்சன் ஆகியோ திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுகிறார். 


இந்தநிலையில், இன்று இந்நிலையில் தலைமைச் செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மூன்று பேரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர். பாலு, ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.