ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினாவில் பேரணி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பேரணி நடைபெற்றது.
சென்னை : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பேரணி நடைபெற்றது.
இதில் சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கு மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை மெரினாவில் பேரணி நடைபெற்றது.