ராம மோகன ராவுக்கு மீண்டும் உயர் பதவி அளித்த தமிழக அரசு
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் சிக்கிய மாஜி தலைமை செயலர் சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி வழங்கிய தமிழக அரசு
கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடந்த அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனையை அடுத்து, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ராமமோகன ராவுக்கு, மீண்டும் அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வரலாற்றில் முதல் முறையாக தலைமைச் செயலாளர் வீட்டிலும் அலுவலகத்திலும் கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி ரெய்டு நடந்தப்பட்டது. லட்சக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுக்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
அதைத் தொடர்ந்து, ராமமோகன ராவ் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்றார். ராமமோகன ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது அவருக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தொழில் முனைவோர் மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளராக இருந்த ராஜாராம் நில நிர்வாக துறையின் முதன்மை செயல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.