ராமமோகன ராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!!
முன்னாள் தமிழக தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவின் அண்ணாநகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். ராமமோகன் ராவின் மகன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்தப்பட்டது. அவரது வீடுகள், அலு வலகங்களில் சோதனை நடத்தி ரூ.5 கோடி தங்கம், ரூ.30 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: முன்னாள் தமிழக தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவின் அண்ணாநகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். ராமமோகன் ராவின் மகன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்தப்பட்டது. அவரது வீடுகள், அலு வலகங்களில் சோதனை நடத்தி ரூ.5 கோடி தங்கம், ரூ.30 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகம், ஆந்திரா, கர் நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் மொத்தம் 13 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. 2 நாட்கள் இந்த சோதனை நீடித்தது. இந்த சோதனையில் கட்டுகட்டாக பணக்குவியலும், கட்டிகட்டியாக தங்கமும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், ராம்மோகன்ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ராம்மோகன் ராவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக வருமானவரித்துறை சோதனை நடவடிக்கையில் சிக்கியதும் தலைமைச்செயலாளர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.