ராமதாஸ் ஒரு ரவுடி, அவரது மகன் அன்புமணி ஒரு கேடி - வன்னியர் கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி
பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு ரவடி, அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஒரு கேடி என வன்னியர் கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி கடுமையாக சாடியுள்ளார்.
வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு 10.5 சதவீதம், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, வன்னியர் கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் வழங்கியதாக தெரிவித்தார். ஆனால் மற்ற சமுதாயத்தினர் புரிந்து கொள்ளாமல் போராட்டங்கள் நடத்தினால், நமக்கும் இட ஒதுக்கீடு தருவார்கள் என நினைத்து போராடி வருகிறார்கள் என கூறிய அவர், ஆந்திராவில் இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடதியதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கபட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றம்? - அமைச்சர் முத்துசாமி சொன்னது இதுதான்!
காலதாமதம் பண்ணாமல் தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ராம மூர்த்தி, நாங்கள் அமைதியாகவும் ஜனாயகம் முறையிலும் இந்த கோரிக்கையை கையாள்வதாக தெரிவத்தார். 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை பற்றி ராமதாஸ் பேச கூடாது என்று ராமமூர்த்தி ஆவேசமாக தெரிவித்தார். இதற்கான விதை நான் போட்டதாகவும் ஆவர் கூறினார்.
உலக முழுக்க வன்னியர் சமுதாயத்தின் பணம் மற்றும் அறக்கட்டளைகளை ராமதாசு உரிமை கொண்டாடி வருவதாக குற்றம் சாட்டிய ராமமூர்த்தி, ராமதாஸ் ஒரு ரவுடி என்றும், அவரது மகன் அன்புமணி ஒரு கேடி என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். இவர்கள் பாமக கட்சியில் குறிப்பிட்ட சில குழுவை வைத்துக்கொண்டு வன்னிய மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள், வன்னியர் சொத்துக்களை தொடர்ந்து ஏமாற்றி பெயர் மாற்றம் செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி ஆதாரவாளர் வீட்டில் சோதனை... அமலாக்கத்துறை அதிரடி - பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ