ராமநாதபுரம் மாவட்டம் கான்சாகீப் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர், தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இருதினங்களுக்கு முன்பு இரவு நாய்க்கு சாப்பாடு வைத்துவிட்டு வீட்டின் முன்பு கட்டிப் போட்டுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் கட்டிப் போடப்பட்டிருந்த நாயைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த ஜனார்த்தனன், வீட்டின் வெளியே வந்த பார்த்த போது, முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் நாய் இறந்து கிடந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தன் குட்டிகளுக்கு சாப்பாடு வைத்ததற்காக தாய்க்கு நன்றி சொன்ன நாய்!


இதனால் சந்தேகமடைந்த ஜனார்த்தனன், தனது வீட்டின் எதிரே உள்ள குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார். அதில், பதிவான காட்சிகள் ஜனார்த்தனை உலுக்கியது. அடையாளம் தெரியாத 6 பேர் கட்டை, கம்புகளுடன் வீதிகளில் நடந்துசெல்கின்றனர். பின்னர், ஜனார்த்தனின் நாயை, அந்தக் கும்பல் கொடூரமாக கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளது. உடனடியாக, கேணிக்கரை காவல்நிலையத்தில் ஜனார்த்தனன் புகார் செய்தார். சிசிடிவி காட்சிகளைப் பார்த்த கேணிக்கரை போலீஸார், நாயை அடித்துக் கொன்றவர்களைத் தேடி வந்தனர். தொடர் விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்புராணி பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (21), அருப்புக்காரதெருவைச் சேர்ந்த முகமது ரிபாஸ் (21), புள்ளிக்காரத் தெருவைச் சேர்ந்த அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | குழந்தைக்கு பெட்சீட் போர்த்திவிடும் நாய்! வைரலாகும் வீடியோ!


சிசிடிவியில் பதிவான 6 பேரில் மூன்று பேரை மட்டும் தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருகின்றனர். சிக்கிய மூன்று பேரிடம், நாயை எதற்காக கொலை செய்தீர்கள் என்று போலீஸார் விசாரணை செய்தனர். அதற்கு அவர்கள் சொன்ன பதில், ‘நாங்கள் நடந்து சென்றபோது அந்த நாய் எங்களைப் பார்த்துக் குறைத்தது. இதனால் ஆத்திரத்தில் அடித்துக்கொலை செய்து விட்டோம்’ என்று தெரிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR