Vinoth Babu: முதலமைச்சரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
மாற்றுத் திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் எனக்கூறி பலரையும் ஏமாற்றிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த போலி நபர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த சில வருடங்களாக மாற்றுத்திறனாளிகளின் இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக்கூறி போலியான கப்பை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் உட்பட பலரையும் ஏமாற்றிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் பாபு என்பவர் மீது போலீசார் இன்று காலை இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையே தொடங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழ செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி உள்ளார்.
மேலும் படிக்க | கோழைத்தனமான பிளாக் மெயில் கும்பல்... அண்ணாமலை ஆடியோவுக்கு பிடிஆர் விளக்கம்!
இந்த சூழ்நிலையில் இவர் கடையில் வாங்கிய கப்புகளை வைத்துக்கொண்டு தான் வெளிநாடுகளில் சென்று போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளதாகவும், குறிப்பாக கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றதாகவும், அதில் பாகிஸ்தானை வீழ்த்தி கப்பு வாங்கி வந்ததாக கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மட்டுமின்றி பல்வேறு முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் மற்றும் முதல்வரையும் சந்தித்து கடையில் வாங்கிய கப்புடன் சென்று வாழ்த்து பெற்றார்.
இதை அறிந்த உண்மையான வீல் சேர் கிரிக்கெட் அணியின் வீரர்கள் மற்றும் அவரால் ஏமாற்றப்பட்ட பலரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த புகார் மனுவை தொடர்ந்து அதிகாலை வினோத் பாபு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் (406,420) மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ