"கரம் கோர்ப்போம், காவிரி காப்போம்" என்ற பெயரில் காவிரி விழிப்புணர்வு பிரச்சாரத்தை பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தொடங்குகினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை 9 மணிக்கு ஒகேனக்கல்லில் விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கி 30-ந் தேதி பூம்புகாரில் நிறைவு செய்கிறேன்".


உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் சொல்லியும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்கிறது. திராவிட கட்சிகள் அதன் பங்கிற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் திட்டமிட்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. எனவே இப்பகுதிகளை பாதுகாக்க, வேளாண் மண்டலமாக இப்பதிகளை மத்திய அரசு அமைக்க வேண்டும்.


திராவிட கட்சிகளால் கடந்த 50 ஆண்டுகள் காவிரி பிரச்சினையில் உரிமையை இழந்துவிட்டோம். இனியும் உரிமையை இழக்கக்கூடாது. மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரசார பயணத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதவது.