ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிருத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
இறால் மீன்களுக்கு உரிய விலை இல்லாமல் ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் முறையில் கொள்முதல் செய்வதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு சென்று பிடித்து வந்த மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற காரணத்தால்,  காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் மீன்களுக்கான விலையை அரசு நிர்ணயம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு தளையீடு நிகழும் வரை வேலைநிறுத்தம் தொடரும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 


அதவேளையில் தனியார் நிறுவனங்கள் போதிய ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்து நியாயமான விலைக்கு வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.


இதனால் ராமேஸ்வரம் பகுதியில் விற்பனை இறால்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.